நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2019-01-18ஆண்டவரே இயேசுவே,
"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன; எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" என்று கூறி, முடக்குவாதமுற்ற ஒருவரை நீர் குணப்படுத்தியதை இன்றைய வாசகத்தில் வாசிக்கிறேனே! இந்நாளில், நான் செய்த அளவற்ற பாவங்களுக்காக உம்மை நோக்கி செபிக்கிறேன் ஐயா! அந்த முடக்குவாதரை போல நான் உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் ஆண்டவரே! என் பாவங்களை மன்னித்து, என் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்; என் பிணிகளை போக்கியருளும் இயேசுவே! என் எண்ண ஓட்டங்களை அறிந்தவர் நீர்; அவற்றை சீரப்படுத்த எனக்கு உதவி செய்யும். இவையனைத்தையும் இந்நாளில் இயேசுவின் நாமத்தில் மன்றாடுகிறேன், ஆமென்!

"நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்"புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித வர்த்தகம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள உரைகள் மற்றும் வழங்கியுள்ள செய்திகளின் தொகுப்பாக, "நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்" என்ற நூல் வெளியானது ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் கடவுளின் வாக்குறுதியை நம்பி, வயதான... [2019-01-17 23:58:38]திருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க கண்டத்திற்கே உரிய கலாச்சாரத்தையும், இயேசு சபையின் நிறுவனர், புனித இஞ்ஞாசியாரின் தனி வரத்தையும் தன் பணியில் வெளிப்படுத்துகிறார் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் இலத்தீன் அமெரிக்க கண்டத்திலிருந்து வந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,... [2019-01-16 21:54:25]திருமுழுக்கின்போது இயேசு முதலில் இறங்கியது மக்களுக்குள்இயேசுவின் திருமுழுக்குத் திருவிழா, நம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்க உதவுகிறது கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் இயேசு கிறிஸ்து, யோர்தான் நதியில் இறங்கி திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னால், அவர் மக்கள் கூட்டத்திற்குள் சென்றே ஆற்றை அடைய வேண்டியிருந்தது என்றார் திருத்தந்தை... [2019-01-15 00:57:47]

பெஞ்சமின் ஹென்றி மில்லர் - இலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர்இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு பிறந்த நாளன்று மரணித்தார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925ஆம் ஆண்டு அக்டோபர்... [2019-01-05 12:21:19]அருட் தந்தை செட்றிக் அடிகளார் விசப் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைமட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இளம் அருட் தந்தையர்களில் ஒருவரான அருட் தந்தை செட்றிக் அடிகளார் விசப் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, எம்மை விட்டு இறைபதம் அடைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த... [2018-12-19 23:35:55]

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஸ்டீஃபன் அன்டனி பிள்ளை அவர்களை நியமித்துள்ளார். ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள், தன் பணியிலிருந்து ஒய்வு பெற விரும்பி,... [2019-01-17 23:50:47]இந்திய திருஅவை பணி குழுக்களின் தலைவர்கள் தேர்வுசுற்றுச்சூழலுக்கென புதிதாக ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் இம்மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை இடம்பெற்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டம்,... [2019-01-15 00:53:11]

நாம் எப்படி நம்முடைய துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்?நம் எல்லோருடைய வாழ்விலும் கஸ்டங்கள் துன்பங்கள் வேதனைகள் சோதனைகள் இருக்கத்தான் செய்கின்றது.உங்களில் யாராவது நாங்கள் வேதனை துன்பங்கள் அல்லது சோதனைகளை அனுபவித்தது இல்லை சொல்லக்கூடியவர்கள் இருக்கின்றீர்களர்? [2018-10-07 21:09:47]

எழுத்துருவாக்கம்:ராஜ்குமார் சொய்சாநீங்கள் தாவீதா சவுலாஇருவரும் இஸ்ராயேல் மக்களின் அரசர்கள். சவுல் இஸ்ராயேல் மக்களின் முதல் அரசன் தாவீது அதற்கு பின் அரசனானவர். இருவரும் ஆண்டவரினால் அபிசேகம் பண்ணப்பட்டவர்கள்.இருவரோடும் ஆண்டவரின் ஆவி இருந்தது.ஆனால் ஒருவரோடு மட்டுமே ஆண்டவரின் ஆவி கடைசி வரைக்கும் இருந்தது. மற்றவரிடமிருந்து இடையிலேயேஆண்டவருடைய ஆவிஎடுக்கப்பட்டது. [2018-07-08 23:46:07]

எழுத்துருவாக்கம்:ராஜ்குமார் சொய்சா

நற்செய்திப்பகிர்வு


2019-01-18

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

உன்னை என் கண்கள் தேடுதே


2019-01-18

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2019-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! கவலைக்குரிய விதத்தில் உங்கள் மத்தியில் பல சண்டை சச்சரவுகள், வெறுப்புகள், சொந்த விருப்புகள், சுயநலங்கள் உள்ளன. நீங்கள் இலகுவாக எனது மகனையும் அவரது வார்த்தைகளையும் அவரது அன்பையும் மறந்து விடுகின்றீர்கள். பல ஆன்மாக்களில் நம்பிக்கை அழிந்து விடுவதுடன், இதயம் உலகப் பொருட்களின் மாயையில் அமிழ்ந்து விடுகின்றது. ஆனால் தற்போதும் நம்பிக்கை மற்றும் அன்பைக் காட்டுவது மற்றும் எனது மகனை எவ்வாறு நெருங்கி வருவது எனவும், களைப்படையாமல் எனது...
2018-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் எடுத்துச் செல்கிறேன், அவரே சமாதானத்தின் அரசர். அவர் உங்களுக்கு சமாதானத்தைத் தருவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் மகிழ்வையும் பணிவையும் தருவார். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக இந்த இரக்கத்தின் காலத்தில் செபித்துக்கொள்வேன். நான் உங்களுடன் இருக்கும் வேளையில் எனது அன்பின் அடையாளமாக உங்களைப் பாதுகாப்பதுடன் நித்திய வாழ்விற்கு வழி நடத்துகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.
2018-11-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் மற்றும் செபத்தின் காலம், காத்திருக்கும் மற்றும் அன்பளிப்பு வழங்கும் காலம். இறைவன் தன்னை உங்களுக்கு வழங்குகிறார், அதன்மூலம் நாங்கள் அனைத்திலும் மேலாக அவரை நேசிக்கின்றோம். ஆகவே, அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயங்கள் மற்றும் குடும்பங்களைத் திறவுங்கள், அதன்மூலம் இந்த காத்திருப்பு மற்றும் செபம் அன்பாக உருவெடுப்பதுடன் எல்லாவற்றிற்கும் மேலாக அதை வழங்குவதில் தங்கியிருக்கும். நான் உங்களுடன் உள்ளேன், அன்பான பிள்ளைகளே, உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள்,...


திருவெளிப்பாட்டு ஆண்டு 2018/2019

02/12/2018-01/12/2019


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)